முதலடி 11: கிறிஸ்மஸ் – தேவன் தம் குமாரனை உலகிற்கு அனுப்பினார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வேதத்தில் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது.  இது ஏசாயா என்ற தீர்க்கதரிசி மூலமாக பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லபட்டது.”இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகி ஒரு குமாரனை பெறுவாள் .அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாய்” என்று ஏசாயா 7:14 இல் வேதத்தில் சொல்ல பட்டிருகிறது.  இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.  நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்க, தேவனோடு நம்மை ஒன்று சேர்க்க தேவன் நமக்காக ஒரு ரட்சகரை அனுப்புவேன் Read More …

முதலடி 10: தேவன் நம் மேல் வைத்த அதிசய அன்பு

ஆதாம்,ஏவாள் பாவம் செய்து தேவனோடு உள்ள உறவை இழந்தனர். ஆனால் தேவன் நம் மேல் வைத்த அதிகமான அன்பினால், பாவத்தைவெறுக்கிற அவர், நம்மை நேசிக்கிறார்.நாம் பாவம் செய்யாதபடி நம்மை காத்துக்கொள்ள முடியாது.பாவம்செய்வதால் தேவனோடு உள்ள நம் உறவு முறிந்து  விடுகிறது.மறுபடியும் நம்மை தம்மிடம் சேர்த்துக்கொள்ள விரும்பி,அவருடைய ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவை பாவம் நிறைந்த இந்த உலகைதிற்கு அனுப்பினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்ததினால் நம்முடைய பாவதிற்குரிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார். இத்தனை  பெரிய Read More …

முதலடி 9: ஆதாம், ஏவாளின் வாழ்க்கை வரலாறு

தேவன் படைத்த முதல் ஆண், பெண் ஆதாம் ஏவாள் ஆவார்கள். இவர்களுடைய வரலாறு வேதத்தில் முதல் புத்தகத்தில் இருக்கிறது.  தேவன் தம்மை போல அவர்களை படைத்தார்.  எதேன் என்ற அழகான தோட்டத்தில் அவர்களை வைத்தார். ஒவ்வொரு நாளும் தேவன் அவர்களோடு பேசவும் நடக்கவும் வந்தார். நம்மால் அதை நினைத்து பார்க்க முடியாது. வானத்தையும் பூமியையும் படைத்த எல்லாம் வல்ல தேவன் தாம் உருவாக்கிய மனிதனோடு உறவு கொள்ள விரும்பினார், ஏனெனில் அவருக்கு நாம் விசேஷமானவர்கள். ஆதாம், ஏவாள் Read More …

முதலடி 8: தேவன் – நம்மை படைத்தவர்

“தேவன் இவ்வளவாய் உலகத்தில் (நம் எல்லார் மேலும்) அன்பு கூர்ந்தார்” என்று யோவான் 3:16 இல் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. வேதத்தில் தேவன் தம்மை பற்றி, தம்முடைய அன்பை பற்றி என்ன சொல்கிறார்? முதலாவது வசனமானது ஆதியாகமம் 1:1: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” அவர் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார். மலைகளையும், ஆறுகளையும், சமுத்திரத்தையும் படைத்தார்.  மரம், செடி, கொடிகளையும், பூக்களையும், மிருகங்களையும், பறவைகளையும், பூமியிலுள்ள எல்லா உயிரினங்களையும் படைத்தார். இவ்வாறு படைக்கபட்ட உலகின் Read More …

முதலடி 7: பரிசுத்த வேதம் மூலம் ஆண்டவர் இயேசு நம்மோடு பேசுகிறார்

நீங்கள் ஆண்டவரோடு பேசி, அவர் நீங்கள் பேசுவதை  கேட்கிறார் என்ற சந்தோஷத்தை பெற்றீர்களா? இப்பொழுது ஆண்டவர் இயேசு உங்களோடு பேசி உங்கள் ஜெபத்துக்கு பதில் கொடுக்க காத்திருக்கிறீர்கள? ஆண்டவர் நம்மிடம் எப்படி பேசுகிறார்? பைபிள் என்று அழைக்கபடும் கிறிஸ்தவ வேதத்தின் மூலமாக நம்மோடு பேசுகிறார். அதனால் வேதம் தேவனுடைய வார்த்தை என்று சொல்ல படுகிறது. வேதம் கிறிஸ்தவர்களுடைய பரிசுத்த வேத புத்தகம். ஏனென்றால் தேவன் சொல்லிய வார்த்தைகளை அவருடைய மக்கள் அதில் எழுதி உள்ளனர். வேதத்தில் இரண்டு Read More …

முதலடி 6: ஜெபம் – எப்படி ஜெபிப்பது?

ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்களுக்கு எப்படி ஜெபிப்பது என்று சொல்லி கொடுத்தார்.  நீங்களும் கேட்டால் உங்களுக்கும் ஜெபிக்க கற்று கொடுப்பார். “ஆண்டவர் இயேசுவே, உம்மை ஆராதிக்கிறேன். உம்மை வணங்குகிறேன்! நீர்  என்னுடைய ஆண்டவர். சர்வ வல்லவர். என்னை காப்பாற்றுபவர். உம்மை துதிக்கிறேன். என் பேரில் நீர் வைத்திருக்கிற அதிசயமான அன்புக்காக நன்றி செலுத்துகிறேன்“ என்று நான் ஜெபிப்பேன். இயேசுவையும், அவருடைய அன்பையும் அறிந்து கொள்வதையும் குறித்து அவரிடம் கேட்ப்பேன். என் பாவங்களை மன்னிக்கும் படியும், நான் எப்படி Read More …

முதலடி 5: ஜெபம் – ஆண்டவரோடு பேசுதல்

உன்னுடைய வாழ்க்கையில் ஆண்டவர்  இயேசுவை பின்பற்ற நீ தீர்மானித்து இருக்கிறாய். “எப்படி நான் ஆண்டவரிடம் ஜெபிக்கலாம்” என்று நீ நினைக்கலாம். ஆண்டவர் இயேசுவிடம் நாம் பேசுவதே ஜெபம். ஒவ்வொரு பாடத்திற்கு பின்பும் ஆண்டவரிடம் ஜெபிக்கும் ஜெபம் இருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்லும் போது நீ ஜெபிக்க ஆரம்பித்து விட்டாய். நான் வேறு வேறு வகையில் ஆண்டவர்  இயேசுவிடம் ஜெபிக்கிறேன். அவரை  நான் ஆராதிக்க நினைக்கும் பொழுது அமைதியான இடத்தையும், அமைதியான நேரத்தையும் கண்டு பிடித்து கொள்வேன். முழங்காலில் இருந்து, Read More …

முதலடி 4: இருளில் இருந்து பிரகாசிக்கும் வெளிச்சத்துக்கு

என் வாழ்க்கையில் இருளில் அலைந்த நான் நம்பிக்கை இல்லாமல் தடுமாறினேன். ஒரு நாள், அன்பான, கரிசனையான குரலை கேட்டேன். அது ஆண்டவர் இயேசுவின் குரல். “நானே உலகிற்கு வெளிச்சம். என்னை பின்பற்றி வா” என்று அவர் கூறினார். “ஒரு போதும் இருளில் இருக்க மாட்டாய். நான் உன் வாழ்க்கையை நடத்த உதவி செய்வேன்” என்றார். சந்தோஷத்தோடு அவர் அழைப்பை ஏற்று கொண்டேன். அவர் வெளிச்சத்தில் காலடி எடுத்து வைத்தேன். அவர் என்னை கரம் பிடித்து நடத்துகிறார். அவரை Read More …

முதலடி 3: ஆண்டவராகிய இயேசு இல்லாத இருளில் தொலைந்த வாழ்க்கை

ஆண்டவர் இயேசுவை அறியாதிருந்த போது என்னுடைய வாழ்க்கையை என் விருப்பபடி வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கு வரவிருக்கிற காரியங்களை பற்றியும், வாழ்க்கையின் திட்டங்கள் சரியாக இருக்குமோ என்பதை பற்றியும் எனக்கு தெரியவில்லை. ஏதோ இருளான காட்டில் வழி தெரியாதபடி இடறி கொண்டிருக்கிறதை போல இருந்தேன். பாதை தெரியவில்லை. எங்கே போகிறேன் என்பதும் தெரியவில்லை. பல பெரிய திட்டங்கள் போட்டேன். ஆனால் அவைகள் என்னை தவறான பாதையில் கொண்டு சென்றன. சில சமயங்ளில் என்னுடைய வழி நன்றாக இருந்ததால்  சந்தோஷப்பட்டேன். Read More …

முதலடி 2: ஆண்டவராகிய இயேசு கொடுக்கும் மன்னிப்பு, புது வாழ்வு

ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்து என்னுடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டார் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என்னுடைய பாவ வாழ்க்கையை நினைத்து பார்க்கிறேன். ஆண்டவருக்கு எதிரான என்னுடைய எண்ணங்கள், செயல்கள், வார்த்தைகள் எல்லாம் என்னுடைய முதுகின்     மேல் உள்ள பெரிய சுமையாக இருக்கிறது. என் இருதயத்தில் ஒரு கறையாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு என்னுடைய பாவங்களுக்காக மரித்தார் என்ற நினைவு என் இருதயத்தை துக்கத்தால் உடைக்கிறது. நான் கண்ணீரோடு என் Read More …