முதலடி 21: சாத்தான் – ஆண்டவருடைய பகைவன், நம் பகைவன்

உலகத்திலுள்ள தீய சக்திகளை குறித்து நீ நினைத்தது உண்டா? அவைகள் எங்கிருந்து வருகிறது? யார் அதற்க்கு காரணம்? தவறான காரியங்கள் என்று அறிந்திருந்தும் அதிலே தொடரும் படியாகவும் அதை அனுபவிக்கும் படியாகவும் உனக்குள்ளே எழும்பும் சத்தத்தை கேட்டிருக்கிறாயா? வேதம் சொல்லுகிறது: தீமையான காரியங்கள் யாவற்றிற்கும் சாத்தானே காரணம்.  அவன் ஆண்டவரை எதிர்ப்பவன். மனிதர்கள் யாவரையும் ஆண்டவருக்கு கீழ்படியாமல் அவருக்கு விரோதமாக பாவம் செய்ய தூண்டுபவன். வேதத்தின் முதல் புத்தகத்திலேயே சாத்தானை குறித்து சொல்லபட்டிருக்கிறது. தேவனாகிய ஆண்டவர் ஆதாம், Read More …

முதலடி 20: மோட்சம் – நாம் ஆண்டவர் வீட்டுக்கு செல்லுதல்

உலகிலுள்ள எல்லா மார்க்கத்தினரும் மோட்சமாகிய பரலோகத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். பரலோகம் அருமையான இடம் என்பது அவர்களுக்கு தெரியும். நல்ல கிரியைகளான ஏழைகளுக்கு இரக்கம் காட்டுதல், தேவையுள்ளவர்களுக்கு உதவுதல் போன்ற காரியங்களை செய்து அதன் மூலம் பரலோகத்திற்கு செல்ல முயற்சி செய்கிறார்கள். பரலோகத்திற்கு செல்ல அவர்களே வழியை உண்டாக்க பார்கிறார்கள். தங்களது நல்ல செயல்களை பார்த்து கடவுள் தங்கள் பாவங்களை கண்டு கொள்ளாமல் பரலோகத்தில் சேர்த்து கொள்வார் என்று எண்ணுகிறார்கள். இன்னும் அநேகர் தங்களை வெறுத்து, உபவாசம் பண்ணி, Read More …

முதலடி 19: மோட்சமாகிய பரலோகம் – நம்முடைய நித்திய வீடு

பரலோகம்! பரலோகத்தை நினைக்கும் பொழுதே நான் சந்தோஷமாக பாடும் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. “பரலோகம் இன்ப நாடு, மகிமை, கிருபை நிறைந்த நாடு; என் மீட்பர் முகத்தை நான் அங்கு தரிசிப்பேன், பரலோகமாகிய இன்ப நாட்டில்” பரலோகம் ஆண்டவரின் மகிமையால் நிறைந்திருக்கும் இடம். ஒரு அழகான இடம்.  அதை இயேசு “என் பிதாவின் வீடு” என்று கூறினார். நம்முடைய அறிவுக்கு எட்டாத வகையில் அவருடைய பிள்ளைகளான நாம் பரலோகத்தில் பிதாவோடும் இயேசுவோடும் இருப்போம். இரவும், பகலும் Read More …

முதலடி 18: தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் – நம் உதவியாளர், வழி காட்டுபவர்

சிலுவை மரணத்தை சந்திக்கும் முன்னர் ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்களுக்கு பின் வருமாறு கூறினார் “சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” யோவான் 16:13 ஆண்டவர் இயேசு பரலோகத்திற்கு சென்ற பின் அவருடைய சீடர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். பரிசுத்த ஆவியை பெற்று கொண்ட பின், சீடர்களுக்கு ஆண்டவர் யேசுவுக்காக வாழ கூடிய தைரியமும், ஞானமும் இயேசுவை பற்றி உலகத்தின் மக்களுக்கு கூற தைரியமும் வந்தது. பரிசுத்த ஆவியானவர் நமக்கு எப்படி Read More …

முதலடி 17 : பரிசுத்த ஆவியானவராகிய தேவன்

யார் இந்த பரிசுத்த ஆவியானவர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆண்டவர் இயேசு சிலுவையில் மரிக்கும் முன்பு தான் மரித்து, உயிரோடு எழுந்து,மறுபடியும் தன் பிதாவினிடத்திற்கு போவதாக கூறினார். இதை கேட்ட சீடர்கள்   இதயம் துக்கத்தால் நிறைந்தது. அவர்களை தேற்றி இயேசு கூறியது என்னவென்றால் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. என்னுடைய பிதா என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்   படியாக ஆலோசகரை கொடுப்பார். ஆலோசனை கொடுக்கிற பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் குறித்து உங்களுக்கு சொல்லி கொடுப்பார்” என்றார். இயேசு மரித்து உயிரோடு Read More …

முதலடி 16: ஆண்டவர் இயேசு – உயிர்தெழுந்த ரட்சகர்

ஆண்டவர் இயேசுவின் சீஷர்கள் தங்களின் எஜமான் சிலுவையில் அடைந்த கொடூரமான மரணத்தை கண்டனர். அவர் தங்களோடு இல்லாததால் பயத்தோடும், தனிமை உணர்வோடும் இருந்தனர். இயேசு மரித்து மூன்றாம் நாள் சீடர்களில் ஒரு சிலர் கல்லறைக்கு சென்று ஆச்சரியமான நிகழ்வை கண்டனர். கல்லறை வாசலில் தேவ தூதன் ஒருவர் நின்று சீடர்களிடம் வெற்றிகரமாக, “ஆண்டவர் இயேசு இங்கே இல்லை, அவர் சொன்ன படியே உயிர்தெழுந்தார்!” என்றார். சீடர்களின் துக்கம் சந்தோஷமாக மாறியது! அவர்களின் ஐயர் இயேசு உயிரோடு இருக்கிறார்! Read More …

முதலடி 15: ஆண்டவராகிய இயேசு சிலுவையில் நம் பாவத்திற்காக

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் ரட்சகர்! அவர் உலகத்திற்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றும் நேரம் வந்தது. அவர் பாவிகளாகிய நம்மை மீட்க்க இவ்வுலகத்திற்கு வந்தார். தம்முடைய சீஷர்களிடம் தாம் மரிக்க போவதை பற்றி கூறினார். அவர்கள் அதை கேட்டு மிகுந்த சஞ்சலம் அடைந்தார்கள். ஆனால் “மூன்றாம் நாள் நான் உயிரோடு எழுந்து வருவேன்” என்ற சந்தோஷ செய்தியை அவர்களுக்கு அறிவித்தார். மக்களின் பாவங்களை மன்னிப்பேன் என்று அவர் கூற கேட்ட மத தலைவர்கள் அவர் மேல் கோபப்பட்டனர். Read More …

முதலடி 14: இயேசு ஐயரின் பாதத்தில் அமர்ந்திருத்தல்

ஆண்டவரும், நம் எஜமானனுமாகிய இயேசுவோடு நம் பயணத்தை தொடர ஆசையா? அப்படியானால் வாருங்கள் போவோம். இயேசு செய்த அனேக அற்புதங்களை பார்த்தோம். இப்பொழுது அவர் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்போம். இயேசுவுடைய போதனைகளை கேட்க அநேகர் அவரிடம் வந்தனர். தேவனை பற்றியும் தன்னை பற்றியும் உள்ள எல்லா உண்மைகளையும் அவர்களுக்கு கூறினார். ‘உவமைகள்’ என்று சொல்லப்படும் கதைகள் மூலம் சாதாரணமான மக்கள் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதாக சத்தியங்களை போதித்தார். தானும் பிதாவும் ஒருவரே என்பதையும் இருவரும் Read More …

முதலடி 13: அற்புதங்களை செய்யும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

முப்பது வயதாக இருக்கும் பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஊழியம் செய்ய வீட்டை விட்டு வெளியேறினார். நாமும் அவருடைய சீடர்களாக அவர் போகிற இடத்திற்கு போகவும், அவர் சொல்வதை கேட்கவும், அவர் செய்வதை பார்க்கவும் செல்வோமா? இது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதோ அப்படியே உனக்கும் நிச்சயமாக இருக்கும். இயேசுவானவர் எல்லா ஊர்களுக்கும் சென்று தேவனுடைய ராஜ்யத்தை பற்றி கூறினார்.  எல்லா மனிதர் மேலும் இரக்கம் காட்டினார். சுகவீன பட்டவர்களை, குஷ்டரோகிகளை, கண் பார்வையற்றவர்களை, பேச முடியாதவர்களை, Read More …

முதலடி 12: கிறிஸ்மஸ் – தேவன் நம்மோடிருக்க வந்தார்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறக்கும் நேரம் வந்த போது மரியாளும், யோசேப்பும் பெத்லேகேம் என்ற ஊரில் இருந்தனர். வழி போக்கர் தங்கும் இடமாகிய சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லை. அதனால் ஆடு, மாடுகள் இருக்க கூடிய தொழுவத்தில் தங்கினார்கள். அங்கு தான் இயேசு பாலகன் பிறந்தார். அங்கு ஆடு மாடுகளுக்கு தீனி வைக்க இருந்த பெட்டியில் மரியாள் குழந்தையை துணியில் சுற்றி படுக்க வைத்தாள். நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்ய தேவனுடைய மகன் பாவமான உலகத்தில் அவதரித்தார். பாவத்தோடு Read More …