முதலடி 26: ஆலயத்தில் தேவனை தொழுது கொள்ளுதல்

இன்று ஒரு ஞாயிற்று கிழமை. நான் மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஆண்டவரை ஆராதிக்க ஆலயத்திற்கு செல்கிறேன். நீயும் என்னோடு வர விரும்புவது எனக்கு மிக சந்தோசம்.

ஏன் கிறிஸ்தவர்கள் ஞாயிற்று கிழமை ஆலயதிற்கு செல்லுகிறார்கள்? வாரத்தின் முதல் நாள் ஞாயிற்று கிழமை ஆண்டவர் இயேசு கல்லறையில் இருந்து உயிரோடு எழுந்தார்.

உலகிலுள்ள அணைத்து கிறிஸ்தவர்களும் ஞாயிற்று கிழமை ஆண்டவரை ஆராதிக்கவும் நன்றி செலுத்தவும் அவருக்கு துதி செலுத்தவும் ஆலயத்தில் கூடுகிறார்கள். ஞாயிற்று கிழமை ஆண்டவருடைய நாள் என்று பிரித்தெடுத்து அன்று அவரை ஆராதிக்கின்றனர்.

ஆலயத்தின் மேற் புறத்தில் சிலுவை வைக்கபட்டிருபதை நீ பார்த்திருக்கிறாயா? ஆலயத்தின் மேல் ஒரு சிலுவையும் உள்ளே ஆராதிக்கின்ற இடத்தில் இன்னொன்றும் பார்க்கலாம். கிறிஸ்தவர்களுக்கு சிலுவை ஓர் விலை ஏறபெற்ற அடையாளம். அது பாவத்தில் இருந்து மனுக்குலத்தை மீட்க இயேசு சிலுவையில் தம் ஜீவனை கொடுத்ததை நினைவு படுத்துகிறது.

ஆலயத்திற்கு உள்ளே சென்று அமைதியாக உட்காரலாமா? அங்கே மற்ற கிறிஸ்தவர்கள் அமர்ந்திருப்பதை காண்கிறோம். அமைதியாக அமர்ந்து ஆண்டவர் இயேசுவை ஆராதிக்க நம்மை ஆய்த படுத்தி கொள்வோம்.

ஆர்கனிலிருந்து அழகாக வெளிப்படும் இசையின் சத்தத்தை கேட்க்கும் பொழுது நமது சிந்தனை ஓர் முகமாய் ஆண்டவரை நோக்கி உயர்த்த படுகிறது. ஆண்டவரின் பிரசன்னத்தை ஆலயத்தில் நாம் உணருகிறோம்.

ஆலய தலைவர் ஒருவர் ஆலயத்தில் இருக்கிறார். அனைத்து மக்களுக்கும் ஆவிக்குரிய தலைவராக இருக்கிறார். நாம் ஆண்டவரை ஆலயத்தில் ஆராதிக்கும் படி நம்மை வழி நடத்துகிறார். இயேசுவை குறித்து பாடல்களை சந்தோஷமாக நாம் பாடி அவரை துதிக்கிறோம். தலைவர் ஜெபிக்கிறார். பைபிள் இல் இருந்து வேத வார்த்தைகள் வாசிக்க படுகிறது. அவைகளை விளக்கமாக தலைவர் போதித்து சொல்லி கொடுக்கிறார். ஆசீர்வதத்தோடு ஆராதனை முடிகிறது.

ஆராதனை முடிந்த உடன் மற்ற மக்களை வெளியில் சந்திக்கிறோம். சந்தோஷமாக பேசுகிறோம். அவர்களும் ஆண்டவருடைய பிள்ளைகள்.  அதனால் நாம் எல்லாரும் ஒரே குடும்பம், ஆண்டவருடைய குடும்பம். அவர்கள் நம்முடைய சகோதர சகோதரிகள். ஆண்டவர் இயேசுவை ஏற்று கொண்ட அனைவருக்கும் அவர் பரம தகப்பன்.

வேதத்தில் தாவீது என்ற அரசன்  சங்கீதம் 122  : 1 இல் “கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன பொது மகிழ்ச்சியாய் இருந்தேன்” என்று கூறுகிறார்.

ஜெபம்: “சர்வ வல்ல ஆண்டவரே, மற்ற விசுவாசிகளோடு உம்மை ஆராதிக்க கொடுத்த ஆலயத்துக்காகவும் எங்களை உம்முடைய சந்நிதிக்கு அழைத்ததற்காகவும் நன்றி செலுத்துகிறேன்.  ஆமென்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *