ஆதாம்,ஏவாள் பாவம் செய்து தேவனோடு உள்ள உறவை இழந்தனர். ஆனால் தேவன் நம் மேல் வைத்த அதிகமான அன்பினால், பாவத்தைவெறுக்கிற அவர், நம்மை நேசிக்கிறார்.நாம் பாவம் செய்யாதபடி நம்மை காத்துக்கொள்ள முடியாது.பாவம்செய்வதால் தேவனோடு உள்ள நம் உறவு முறிந்து விடுகிறது.மறுபடியும் நம்மை தம்மிடம் சேர்த்துக்கொள்ள விரும்பி,அவருடைய ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவை பாவம் நிறைந்த இந்த உலகைதிற்கு அனுப்பினார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்ததினால் நம்முடைய பாவதிற்குரிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார். இத்தனை பெரிய தேவ அன்பை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. தேவ குமாரனே நமக்காக மரித்தார்! தேவன் வேதத்தில் யோவான் 1:12 இல் கூறி இருக்கிறார்: “இயேசுவின் நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்று கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்“
நீயும் நானும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளும்போது நாம் தேவுனுடைய மன்னிப்பை பெற்றுக்கொள்கிறோம். நம்மை மன்னித்து பரிசுத்தப்படுத்துகிறார். தேவனுடைய பிள்ளையாக நாம் மாறும் போது அவருடைய குடும்பத்தில் நாம் மறுபடியும் பிறக்கிறோம். “அப்பா, பிதாவே ” என்று அவரை அழைக்கிறோம். அவரோடு பேசி, நாம் அவரை நேசிக்கிறோம் என்று அவரிடம் சொல்லும்போது அவர் தந்தையாய் மகிழுகிறார். இதைவிட சந்தோஷம் நமக்கு இருக்க முடியுமா?
வேதத்தில் தேவன் யோவான் 3:16 இல் சொல்லிருக்கிறார் “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் ” என்று.
ஜெபம்: “அன்புள்ள பரம தகப்பனே, எனக்காக உம்முடைய ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பி என்னை ரட்சித்த உம்முடைய அதிசய அன்புக்காக நன்றி செலுத்துகிறேன். ஆமென்.”