முதலடி 9: ஆதாம், ஏவாளின் வாழ்க்கை வரலாறு

தேவன் படைத்த முதல் ஆண், பெண் ஆதாம் ஏவாள் ஆவார்கள். இவர்களுடைய வரலாறு வேதத்தில் முதல் புத்தகத்தில் இருக்கிறது.  தேவன் தம்மை போல அவர்களை படைத்தார்.  எதேன் என்ற அழகான தோட்டத்தில் அவர்களை வைத்தார்.

ஒவ்வொரு நாளும் தேவன் அவர்களோடு பேசவும் நடக்கவும் வந்தார். நம்மால் அதை நினைத்து பார்க்க முடியாது. வானத்தையும் பூமியையும் படைத்த எல்லாம் வல்ல தேவன் தாம் உருவாக்கிய மனிதனோடு உறவு கொள்ள விரும்பினார், ஏனெனில் அவருக்கு நாம் விசேஷமானவர்கள்.

ஆதாம், ஏவாள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் பாவம் செய்தனர். அதனால் தேவன் அவர்களை தேடி வந்த போது ஓடி ஒளிந்து கொண்டார்கள். அவர்களால் தேவனோடு உறவு கொள்ள முடியவில்லை. பரிசுத்தமான தேவனால் பாவம் செய்கிற மக்களோடு உறவு கொள்ள முடியாது.

இப்படி தான் பாவம் உலகில் வந்தது. இப்பொழுது நாம் எல்லாரும் தேவனுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவம் செய்கிறோம்.

பாவமும் அதினுடைய விளைவுகளும் பயங்கரமானது. அதை நாம் இப்பொழுது உலகில் எங்கும் பார்க்கிறோம். இந்த பாவங்கள் நம்மை பரிசுத்த தேவனிடமிருந்து பிறித்து விடுகிறது.

தேவன் நம்மிடம் “எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்கள் ஆனோம்” என்று வேதத்தில் ரோமர் 3:23 இல் கூறுகிறார்.

ஜெபம்: “அன்புள்ள தேவனே! என்னுடைய பாவங்களுக்காக மனஸ்தாப படுகிறேன். என் பாவங்களை எல்லாம் எனக்கு தயவாய் மன்னியும். உம்மை நெருங்கி ஜீவிக்க ஆசை படுகிறேன். ஆமென்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *