“தேவன் இவ்வளவாய் உலகத்தில் (நம் எல்லார் மேலும்) அன்பு கூர்ந்தார்” என்று யோவான் 3:16 இல் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
வேதத்தில் தேவன் தம்மை பற்றி, தம்முடைய அன்பை பற்றி என்ன சொல்கிறார்? முதலாவது வசனமானது ஆதியாகமம் 1:1: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”
அவர் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார். மலைகளையும், ஆறுகளையும், சமுத்திரத்தையும் படைத்தார். மரம், செடி, கொடிகளையும், பூக்களையும், மிருகங்களையும், பறவைகளையும், பூமியிலுள்ள எல்லா உயிரினங்களையும் படைத்தார்.
இவ்வாறு படைக்கபட்ட உலகின் அழகை நான் பார்க்கும்போது சிருஷ்டிகரான தேவனை என் மனதில் ஆராதிக்கிறேன்.
தேவன் ஆணையும் பெண்ணையும் தம்மை போல சிருஷ்டித்தார் என்று வேதம் கூறுகிறது. உருவத்தில் நாம் தேவன் போல இல்லை. ஆனால் ஆவியிலும், ஆத்துமாவிலும் நாம் அவரை போல இருக்கிறோம். நம்மை அவர் விசேஷ மானவர்களாக படைத்திருக்கிறார்.
உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற கோடான கோடி மக்களில் வேறு ஒருவர் கூட உன்னை போலவோ என்னை போலவோ இல்லை. இது ஆச்சரியமாக இல்லையா? நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு மிக விசேஷமானவர்கள்.
தேவன் நம் ஒவ்வொருடைய பேரையும் அறிந்திருக்கிறார். வேதத்தில்
ஏசாயா 43:1 இல் “உன்னை பேர் சொல்லி அழைத்தேன். நீ என்னுடையவன்.” என்று சொல்லி இருக்கிறார்.
இது நமக்கு எவ்வளவு பெரிய தேவ சிலாக்கியம்!
ஜெபம்: “எல்லாம் வல்ல தேவனே, வானத்தையும் பூமியையும் படைத்தவரே, என்னையும் விசேஷமாக படைத்து உம்மிடம் அழைத்தற்காக மிக்க நன்றி செலுத்துகிறேன். ஆமென்”