ஒரு நாள் நான் ஆண்டவர் இயேசுவிடம், “ஆண்டவர் இயேசுவே, உம்மை என்னுடைய ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்று கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கைக்கு நீர் ஆண்டவராக இருக்க வேண்டும்” என்று வேண்டினேன்.
நான் போய் கொண்டிருந்த வழியை விட்டு திரும்பி ஆண்டவர் இயேசுவை பின்பற்ற ஆரம்பித்தேன். எதற்காக ஆண்டவர் இயேசுவை நான் பின்பற்ற வேண்டும்? ஏனெனில் அவர் என்னுடைய ரட்சகர். ரட்சகர் என்றால் பாவங்களில் இருந்து விடுவிக்கிறவர். நான் பாவத்தில் மூழ்கும் சமயத்தில் என்னை காப்பற்றினவர் என் ரட்சகர்.
தேவனுடைய கட்டளையை ஒவ்வொரு நேரமும் நான் மீறும் போது பாவம் செய்கிறேன். என் பாவங்கள் கொலை, கொள்ளை, குடியாட்டம் போன்ற பெரிய பாவங்கள் அல்ல. அவை நான் தினமும் செய்யும் சிறு, சிறு பாவங்களே. சிறு பொய், சிறு திருடல், பெற்றோரை எதிர்த்தல், பொருட்களை இச்சித்தல், பொறாமை படுதல், மற்றோரை வெறுத்தல் போன்ற சிறிய பாவங்களே. ஆனால் அந்த பாவங்கள் ஒரு மலை அளவு ஆகி என் முன்னே நிற்கிறது. அவை பரிசுத்த தேவனின் உறவிலிருந்து என்னை பிரித்து விடுகிறது.
பாவத்தோடு நான் பரிசுத்த தேவனிடம் செல்ல முடியாது. என் ஜெபங்களை அவர் கேட்க மாட்டார். நான் செய்கிற பாவங்களுக்கு எனக்கு தண்டனை உண்டு. நான் என்ன செய்வேன்? ஒரு நாள் நல்ல செய்தி ஒன்றை கேட்கிறேன்.
அதாவது: ‘ஆண்டவராகிய இயேசு பரலோகத்திலிருந்து இறங்கி பூமிக்கு வந்து என்னுடைய பாவத்திர்க்கான தண்டனையை ஏற்று சிலுவையில் எனக்காக மரித்தார். மறுபடியும் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இப்பொழுது பரலோகத்தில் இருக்கிறார். அவர் பரலோகத்தையும், பூமியையும் ஆள்கிற சர்வ வல்லவர்’ என்பதே.
வேதத்தில் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கபடுவீர்கள்” என்று அப்போஸ்தலர் 16:31 இல் சொல்லப்பட்டு இருக்கிறது.
நான் ஆண்டவராகிய இயேசுவின் இந்த நற்செய்தியை என் முழு மனதுடன் நம்புகிறேன். நம்பி அவரை என் சொந்த ரட்சகராக ஏற்று கொள்கிறேன். நீயும் நம்புகுகிறாயா, சிநேகிதனே?
ஜெபம்: “ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னுடைய இரட்சகரும், கடவுளுமாக இருக்கிறீர். நான் உம்மை கும்பிட்டு ஆராதிக்கிறேன். ஆமென்”