India – Tamil

தமிழ் வளங்கள் – Tamil Resources

சிறந்த கதை – The Story

ஒரே ஒரு கதை மாத்திரமே வாழ்க்கையின் மிகவும் முக்கியமான கேள்விகளுக்கு விடை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அது வாழ்க்கையின் நோக்கத்தையும் அதன் அர்த்தத்தையும் குறித்த உண்மையை  தெரிவிக்கிறது. மற்ற கதைகளெல்லாம் உருவாவதற்கு இந்தக் கதையே தூண்டுகோலாக இருக்கிறது. அது நம் எல்லோரைப் பற்றியும் விவரிக்கின்ற உண்மையான கதை. இதுதான் அந்த சிறந்த கதை. மற்றக் கதைகளைப் போலவே இதுவும் ஒரு ஆரம்பத்தைக் குறித்துச் சொல்கிறது. நாம் ஏன் இவ்வுலகில் இருக்கிறோம், உலகில் என்ன தப்பாக இருக்கிறது, தேவன் அதை எப்படி சரி செய்தார், அந்தக் கதையில் நாமும் ஒரு முக்கியமான பகுதி எடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பவைகளைப் பற்றி அந்தக் கதையே சொல்லுகிறது.

 

என்னைப் பின்பற்றுங்கள் – Follow Me

இயேசுவோடு நடப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவித்தல். 40 பகுதிகளாக உள்ள இந்த தொடர் நிகழ்ச்சி, குமார், ஷாமாலா சுந்தர் என்பவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இயேசுவைப் பின்பற்றுதல் என்றால் என்ன என்பதைக் குறித்து இந்தியச் சூழலில் இவர்கள் பரிமாறிக் கொள்கின்ற கருத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

இயேசு – திரைப்படம் – The Jesus Film

இது இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்த ஆவணதிரைப்படம். இது லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 1979ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆயிரத்திற்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது திரைப்பட வரலாற்றிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டதும், அதிகமான பேர்கள் பார்ததுமான திரைப்படம். இந்த திரைபடத்தில் இயேசுவின் வாழ்க்கையை நீங்கள் அனுபவித்து எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

யோவான் சுவிசேஷம் – Gospel of John

யோவான் சுவிசேஷம், இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இரண்டு தலைமுறைகளுக்கு பின் எழுதப்பட்டது. ரோம சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரத்தின் கீழாக எருசலேம் இருந்த காலகட்டத்தில் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன. குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து தண்டிக்கும் முறை ரோமர்களின் வழக்கத்தில் இருந்தது. ஆனால் அந்த தண்டனை முறைக்கு யூத சட்டத்தில் இடமில்லை. இயேசுவும் அவருடைய ஆரம்பகால சீஷர்களும் யூதர்கள். புதிதாக முளைத்தெழும்புகிற சபைக்கும், ஏற்கனவே இருந்த யூதமத நிர்வாகத்திற்கும் இடையில் முன்னர் ஏற்பட்டிராத விதத்தில் விவாதங்களும் விரோதங்களும் நடைபெற்ற காலகட்டத்தை இந்த சுவிசேஷம் வெளிப்படுத்துகிறது.

 

சிறு பிள்ளைகளுக்காக இயேசுவின் சரித்திரம் – The Story of Jesus for Children

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த சிறுபிள்ளைகள் ஒருவேளை இயேசுவைக் குறித்த கதையைக் கூறக்கூடுமானால் எப்படியிருக்கும் என்பதை லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் சொல்லப்படும் இயேசுவின் கதை.

இயேசுவைப் பின்பற்றுதல் – Following Jesus

இயேசுவைப் பின்பற்றுதல் என்பது ஒரு சிறிய தொடர் நிகழ்ச்சி. இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் விசுவாசத்தில் உறுதிப்படுவதற்கும், கிறிஸ்துவின் சரீரத்தில் கனி கொடுக்கிற அங்கமாகும்படிக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவதற்கும் உதவும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கதைகளை சொல்வதன் மூலமாகவும், “இயேசு” – திரைபடத்திலிருந்து படங்களையும் சிறு காட்சிகளையும் காண்பிப்பதன் மூலமாகவும் வேதாகம சத்தியங்கள் கற்றுத் தரப்படுகிறது. மேலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக எப்படி வாழ வேண்டும் என்பதும் கற்பிக்கப்படுகிறது.