இன்று மற்றும் ஒரு ஆலயத்திற்கு செல்லலாம் வாருங்கள். இப்பொழுது நாம் ஒரு வீட்டின் முன்னால் நிற்கிறோம். இது ஆலய கட்டிடம் இல்லை. உள்ளே போகலாமா?
முன் அறையில் ஒரு சில குடும்பங்கள் கூடி இருக்கின்றனர். நம்மை மனமுவந்து வரவேற்கிறார்கள். ஆராதனை துவங்குகிறது. பாடும் பொழுது நம்மோடு இசைக்க வாத்திய கருவி இல்லை. ஆனால் இருதயத்திலிருந்து இனிமையாக பாடல் பாடுகிறோம்.
மற்ற ஆலயத்தை போல் இங்கும் ஜெபித்து, வேதம் வாசித்து, போதனை கொடுக்க ஒரு தலைவர் இருக்கிறார். ஆராதனை முடிந்ததும் மற்ற சகோதர, சகோதரிகளோடு சந்தோஷமாக நேரத்தை செலவிடுகிறோம்.
ஆலயம் என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். அது வெறும் கட்டிடம் அல்ல. ஆண்டவர் இயேசுவை ஆராதிக்க கூடி வரு மக்களே அவருடைய ஆலயமாகிய சபை. கூடி வரும் மக்கள் யாவரும் ஒரு குடும்பமாக ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும், ஜெபிக்கவும், ஆதரவாக இருக்கிறோம்.
உலக முழுவதற்கும் ஒரு ஆலயம் இருக்கிறது என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் என்ன தெரியுமா? ஆண்டவர் இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரை பின்பட்ற தீர்மாநிதவர்களாகிய உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களே அவருடைய ஆலயம் ஆவார்.
இந்த ஆலயத்திற்கு ஆண்டவர் ஏசுவே தலைவர். இது இயேசுவின் சரீரமாக அழைக்க படுகிறது. ஆண்டவர் இயேசு அவருடைய ஜீவனை கொடுத்து ஆதரிக்கிற ஆலயம் இது. வேதத்தில் எபேசியர் 5:23 இல் “கிறிஸ்து சபைக்கு தலையாய் இருக்கிறார். அவரே சரீரத்திற்கும் ரட்சகராய் இருக்கிறார்” என்று கூறபடுகிறது.
நீங்கள் இதை வாசிக்கும் பொழுதே உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், உங்கள் பாரம்பரியம், மொழி எதுவாக இருந்தாலும், ஆண்டவர் இயேசுவின் ஆலயமாய் இருக்கிறீர்கள். ஆண்டவருக்குள் என்னுடைய சகோதரனும் சகோதரியுமாய் இருக்கிறீர்கள்.
இது ஆச்சரியமாக இல்லையா? நான் உங்களை நேசிக்கிறேன். உங்களுக்காக ஜெபிக்கிறேன். இந்த பகுதியை நீங்கள் வாசிக்கும் பொழுதே என்னோடு சேர்ந்து ஆண்டவர் இயேசுவை அவருடைய குடும்பத்தோடு ஆராதிப்பதை சந்தோஷ படுகிறீர்கள?
ஜெபம்: “ஆண்டவர் ஏசுவே, உலகம் முழுவதில் உள்ள ஆலயத்தின் குடும்பத்தோடு என்னையும் ஒருவராக ஏற்று கொண்டதற்காக நன்றி. ஆமென்.”