முதலடி 24: ஆண்டவரை நேசித்தல், பாவத்தை வெறுத்தல்

பாவம் என்பது என்ன? ஆண்டவர் யேசுவிடம் வரும் வரை நான் பாவத்தை பற்றி இப்படி நினைத்திருந்தேன்:

ஒரு சிறு பொருளை திருடினால் அது ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போன்ற பெரிய பாவம் அல்ல. நான் வெறுக்கும் சிலருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் நான் அவர்களுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. மற்ற குற்றவாளிகளை போல நான் சிறையில் இல்லை. அதனால் நான் ஒரு நல்லவன் என்று நினைத்து கொள்வேன். நான் பாவி அல்ல, அதனால் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று எண்ணிக்கொள்வேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று அறிந்தேன்.

ஆண்டவர் பார்வையில் சிறு பாவம், பெரு பாவம் இல்லை. ஆண்டவர் சில சட்டங்களை வேதத்தில் யாத்திராகமம் 20:3-17 இல் கொடுத்திருக்கிறார். அது

‘பத்து கட்டளைகள்’ என்று சொல்லப்படும். ஒரு கட்டளையில் தவறினாலும் அது பாவம். ஆண்டவர் இயேசு இந்த எல்லா கட்டளைகளையும் சேர்த்து எளிதான முறையில் சொல்லியிருக்கிறார்: “கடவுளை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும். நம்மை நேசிப்பது போல் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.”

எல்லா பாவங்களுமே ஆண்டவருக்கு அல்லது மற்றவர்களுக்கு விரோதமானவை ஆகும். என் இருதயத்தின் உள்ள எல்லாவற்றையும் ஆண்டவர் அறிந்து இருக்கிறார். நான் செய்வதை மட்டும் அவர் பார்க்காமல் அதினுடைய நோக்கத்தையும் அறிந்திருக்கிறார். அவரிடமிருந்து என்னால் எதையும் மறைக்க முடியாது. வெளியே நான் நல்லவனாக வேஷம் போட்டு உள்ளே கெட்டவனாக இருந்து தேவனை ஏமாற்ற  முடியாது.

ஆண்டவருடைய பார்வையில் நான் எவ்வளவு பெரிய பாவி என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆண்டவரை நான் நேசிக்கிறேன். அவர் வெறுப்பதை நான் செய்ய விரும்ப வில்லை. என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்கும் படியாக தாழ்மையோடு அவரிடம் கேட்கிறேன்.

இப்பொழுது ஆண்டவருக்கு மகிமையை கொண்டு வரும் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். பழைய பாவ வாழ்வுக்கு மறுபடியும் நான் திரும்பவும் சென்று எனக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்த ஆண்டவரை ஒரு பொழுதும் துக்க படுத்த நான் விரும்ப வில்லை.

வேதம் கூறுகிறது: “ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாய் இருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின”

2 கொரிந்தியர் 5:17 இந்த ஜெபத்தை நீயும் ஜெபிக்க விரும்புகிறாயா, சிநேகிதனே?

ஜெபம்: “ஆண்டவரே, என்னுடைய இருந்தயத்தை முழுமையாக உம்மிடம் ஒப்பு கொடுக்கிறேன். பாவம் செய்யாமல் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *