முதலடி 14: இயேசு ஐயரின் பாதத்தில் அமர்ந்திருத்தல்

ஆண்டவரும், நம் எஜமானனுமாகிய இயேசுவோடு நம் பயணத்தை தொடர ஆசையா? அப்படியானால் வாருங்கள் போவோம். இயேசு செய்த அனேக அற்புதங்களை பார்த்தோம். இப்பொழுது அவர் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்போம்.

இயேசுவுடைய போதனைகளை கேட்க அநேகர் அவரிடம் வந்தனர். தேவனை பற்றியும் தன்னை பற்றியும் உள்ள எல்லா உண்மைகளையும் அவர்களுக்கு கூறினார்.

‘உவமைகள்’ என்று சொல்லப்படும் கதைகள் மூலம் சாதாரணமான மக்கள் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதாக சத்தியங்களை போதித்தார். தானும் பிதாவும் ஒருவரே என்பதையும் இருவரும் சமமானவர்கள் என்பதையும் மக்களுக்கு கூறினார். “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்” என்றும் “என்னை அல்லாமல் பிதாவினிடத்தில் ஒருவனும் வரான்” என்பதையும் “தாமே பரலோகத்திற்கு செல்ல ஒரே வழி” என்பதையும் நிச்சயமாக கூறினார். மனிதனுடைய வழியில் நடவாமல் தேவனுடைய வழியில் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் ஜனங்களுக்கு படிப்பித்தார்.

இயேசுவானவர் போதித்தது:

“நான் உன்னை மன்னித்திருக்கிறேன். அதனால் நீயும் உனக்கு தீங்கு செய்தவர்களை மன்னிக்க வேண்டும். பகைவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.  பரலோகத்தில் பெரியவனாக இருக்க வேண்டுமானால் இங்கு எல்லா மனிதர் முன்பாகவும் தாழ்மையாக இருக்க வேண்டும். நான் மற்றவர்களுக்கு பணி செய்கிறவராக வந்தேன். அது போல நீங்களும் மற்றவர்களுக்கு பணி செய்கிறவர்களாக இருக்க வேண்டும். நான் உங்களிடத்தில் அன்பாக இருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இயேசு கூறினதை கேட்கும் பொழுது நமக்கு மனதில் சந்தோஷம் ஏற்படுகிறது. அவரை அண்டி அவரோடு இருக்க விரும்புகிறோம்.  வேதத்தின் மூலமாக இன்றும் நம்மோடு பேசி, நமக்கு போதிக்கிறார். ஆவலோடு வேதம் வாசித்து அவர் சத்தத்தை கேட்போமாக.

ஜெபம்: “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மை பின் பற்றி வாழ நீர் சொல்லி கொடுக்கிற எல்லா போதனைகளுக்காகவும் மிக நன்றி. ஆமென்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *