ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்களுக்கு எப்படி ஜெபிப்பது என்று சொல்லி கொடுத்தார். நீங்களும் கேட்டால் உங்களுக்கும் ஜெபிக்க கற்று கொடுப்பார்.
“ஆண்டவர் இயேசுவே, உம்மை ஆராதிக்கிறேன். உம்மை வணங்குகிறேன்! நீர் என்னுடைய ஆண்டவர். சர்வ வல்லவர். என்னை காப்பாற்றுபவர். உம்மை துதிக்கிறேன். என் பேரில் நீர் வைத்திருக்கிற அதிசயமான அன்புக்காக நன்றி செலுத்துகிறேன்“ என்று நான் ஜெபிப்பேன்.
இயேசுவையும், அவருடைய அன்பையும் அறிந்து கொள்வதையும் குறித்து அவரிடம் கேட்ப்பேன். என் பாவங்களை மன்னிக்கும் படியும், நான் எப்படி வாழ வேண்டும் என்று எனக்கு சொல்லி கொடுக்கும் படியும் கேட்ப்பேன்.
என்னுடைய வாழ்க்கையின் எல்லா காரியங்களையும் அவரிடம் சொல்லுவேன். என்னுடைய தேவைகளை சொல்லி அவரிடம் உதவி கேட்பேன். என்னுடைய பிரச்சனைகளில் இருந்து வெளிவர அவர் வழி நடத்துதலை கேட்பேன்.
என்னுடைய குடும்பம், நண்பர்களின் ஆசீர்வாதர்த்திர்காகவும், அவர்கள் தேவைகளுக்காகவும் ஜெபிப்பேன். என்னுடைய வாழ்க்கையை ஆண்டவர் இயேசு மாற்றியதை மற்றவர்களுக்கு எப்படி சொல்ல வேண்டும் என்றும் அவரிடம் கேட்பேன்.
அவர் என் பக்கத்திலிருந்து நான் பேசுவதை கேட்பதால் அவரிடம் பேச நினைக்கும் பொழுதெல்லாம் பேசுவேன். சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் கூட அவரோடு தனியாக செலவிடுவேன்.
இயேசுவை ஆராதித்து அவரிடம் நாம் வைத்திருக்கும் அன்பை பற்றி சொல்லுவோமா? சில நேரம் அமைதியாக அவர் பிரசன்னத்தில் உட்காருவோமா? அவரோடு நாம் இருக்க வரும் போது அது அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. அவருடைய அன்பில் சார்ந்தும் கொள்ளும் போது நமக்கு சமாதானம் கிடைக்கிறது.
ஜெபம்: “ஆண்டவர் இயேசுவே! நான் உம்மோடு நேரத்தை செலவிட விரும்புகிறேன். என் அருகில் வந்து நான் உம்மிடம் பேச கற்று கொடும். ஆமென்”