முதலடி 5: ஜெபம் – ஆண்டவரோடு பேசுதல்

உன்னுடைய வாழ்க்கையில் ஆண்டவர்  இயேசுவை பின்பற்ற நீ தீர்மானித்து இருக்கிறாய். “எப்படி நான் ஆண்டவரிடம் ஜெபிக்கலாம்” என்று நீ நினைக்கலாம்.

ஆண்டவர் இயேசுவிடம் நாம் பேசுவதே ஜெபம். ஒவ்வொரு பாடத்திற்கு பின்பும் ஆண்டவரிடம் ஜெபிக்கும் ஜெபம் இருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்லும் போது நீ ஜெபிக்க ஆரம்பித்து விட்டாய்.

நான் வேறு வேறு வகையில் ஆண்டவர்  இயேசுவிடம் ஜெபிக்கிறேன். அவரை  நான் ஆராதிக்க நினைக்கும் பொழுது அமைதியான இடத்தையும், அமைதியான நேரத்தையும் கண்டு பிடித்து கொள்வேன். முழங்காலில் இருந்து, கரத்தை இணைத்து கண்களை மூடி கொள்வேன். ஆலயத்திலும், வீட்டிலும் நான் இப்படியே ஜெபிக்கிறேன். மற்ற நேரங்களில் அமர்ந்தபடிய தலை தாழ்த்தி, கண்களை மூடி ஜெபிப்பேன்.

எந்த இடத்தில இருந்தாலும் பள்ளியிலோ, கல்லூரியிலோ, வேலை செய்யும் இடத்திலோ பிரயானப்படும் பொழுது, வாகனத்தில் செல்லும்போதோ, வீட்டிலோ, அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுதோ எந்த இடத்திலும் நான் ஜெபிப்பேன். நான் இயேசுவை நினைக்கும் நேரத்திலோ, யாரிடமாவது பேச வேண்டும் என்று எண்ணும் போதோ அவரிடம் ஜெபிப்பேன்.

காலையில் கண் விழித்ததும் அவரிடம் பேசுவேன். ராத்திரி படுக்கையில் அவரோடு பேசுவேன். அவர் ஜெபத்தில் மூலம் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் எனக்கு தருகிறார்.

நம்முடைய தாய் தகப்பனிடமோ, நெருங்கிய நண்பரிடம் பேசுவது போல நம் ஆண்டவர் இயேசுவிடம் பேசலாம். நம்முடைய இருதயத்தின் காரியங்களை அவரிடம் சொல்வதை விரும்புகிறார். ஜெபிப்பது நமக்கு கிடைத்த ஒரு பெரிய பாக்கியம். அவர் ஆண்டவராக இருந்தாலும் நம் அருகில் இருப்பதால் நாம் பேசுவதை கேட்க்க அவர் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறார்.

இது ஆண்டவர் இயேசுவிடம் நாம் பெற்று கொண்ட ஒரு நிச்சயம். “மெய்யாய்

தேவன் எனக்கு செவி கொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தை கேட்டார்.”சங்கீதம் 66:19.

ஜெபம்: “இயேசுவே, நான் உம்மிடம் ஜெபத்தின் மூலமாக பேச எப்பொழுதும் என் அருகில் இருக்கிறீர். நன்றி, ஆண்டவரே. ஆமென்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *